Government of Tmail Nadu, India

தமிழ் நாடு அரசு 
நீர்வள ஆதார அமைப்பு
பொதுப்பணித்துறை
எங்களைப்பற்றி அணைகள்    ஒப்பந்த புள்ளிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்புகள் இறக்கம் செய்க இணைப்புகள் முகப்பு
 

எங்களைப் பற்றி
 

 

பொதுப்பணித்துறையின்
150 வருடங்கள்

முன்னுரை:

தமிழக பொதுப்பணித் துறையின் வரலாற்றை கிழக்கு இந்திய கம்பெனியின் காலமான 1820-இல் இருந்து காணலாம். இது மூன்றாவது பழமையான துறையாகும். வருவாய் மற்றும் சட்டம் முதல் இரண்டு துறைகளாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது பொதுப்பணித்துறை 1858-இல் அரசுத் துறையானது. 1800-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முந்தைய நில அளவைப் பள்ளி மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி பொதுப்பணித்துறையின் கீழ் இருந்தது.

பொதுப்பணித்துறை அனைத்து அரசு கட்டடங்கள் மற்றும் பாசன திட்டங்களான அணைகள், கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளை செயல்படுத்தி வருகிறது.

உடமைகள்:

நமது துறையின் கட்டுப்பாட்டில் 82 அணைகள் /நீர்தேக்கங்கள் உள்ளன. தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ் 38 அணைகளில்/நீர்தேக்கங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், நீர் நம்முடைய நீர்தேக்கங்களை வந்தடைகிறது. இந்த அணைகள் மற்றும் நீர் தேக்கங்களின் கீழ் கால்வாய் அமைப்புகள் மற்றும் ஏரிகள் உள்ளன. நமது மாநிலத்தில் மொத்தமுள்ள 39,202 ஏரிகளில் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்தின் நிகர பாசனப் பரப்பு 2008-09 ஆண்டில் 29.31 இலட்சம் எக்டேராகும். இதில் 7.66 இலட்சம் எக்டேர் கால்வாய்கள் மூலமும், 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலமும் 16.14 இலட்சம் எக்டேர் திறந்த வெளி மற்றும் குழாய்க் கிணறுகள் மூலமும் மீதமுள்ள 0.11 இலட்சம் எக்டேர் இதர ஆதாரங்கள் வாயிலாகவும் பாசனம் பெறுகின்றன. மாநிலத்தின் மொத்த பாசனப் பரப்பு சுமார் 39.33 இலட்சம் எக்டேராகும்.

குறிக்கோள்கள் :

இத்துறையின் மூலம் முக்கியமாக பின்வரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

  • பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரிக்கவும்

  • புதிய கூடுதல் திட்டங்கள், கட்டுமானங்களை உருவாக்கவும், பாசன ஆதாரங்களை மேம்படுத்தவும்

  • மாநிலத்திலுள்ள கட்டடங்களை பராமரிக்கவும்

  • நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்தவும்

  • சாத்தியமான பாசன திட்டங்களை கண்டறிந்து, ஆய்வு செய்து, உருவாக்கி மதிப்பீடு செய்யவும் அதன்மூலம் அரசின் கொள்கைகள், உறுதிமொழிகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றவும்

  • கட்டுமானப் பொருட்கள், நீரியல் மற்றும் நீர்நிலையியல் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவும்

  • நில நீரின் இருப்பு மற்றும் அதன் தரத்தை பரிசீலிக்கவும்.

தொடர்ந்து வருகின்ற அரசுகளும் நீர் ஆதார இருப்பை அதிகரிக்கவும் பாசனம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த அணைகள், நீர் தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் எண்ணற்ற குறுக்கு கட்டுமானங்களான கதவணைகள், கலிங்குகள், நீர் கட்டுப்பாட்டு கட்டுமானங்கள் போன்றவற்றை அமைக்க மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றன.

கடந்த சில காலங்களாக மேலும் சில குறிக்கோள்கள் சேர்ந்துள்ளன. மேற்பரப்பு நீர் இருப்பில் 95ரூ உபயோகப்படுத்தப்பட்டு விட்டதால் பற்றாக்குறையாக உள்ள நீர் ஆதாரத்தை திறம்பட்ட மேலாண்மையின் மூலம் பகிர்ந்தளித்து உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

பாசனத்திற்காக கிடைக்கும் நீரை சரிவிகிதாச்சார முறையில் இடம் மற்றும் கால அவகாசதிற்கேற்றவாறு உபயோகப்படுத்த வேண்டும்.

விவசாய மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் பங்கேற்பு பாசன மேலாண்மையை மேம்படுத்த வேண்டும்.

திட்டங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கும்போது நீர்வள ஆதார அமைப்பினை உலக வங்கி மேம்படுத்தவும் மற்ற அதை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகளின் திறனை மேம்படுத்த கருத்துகளை தெரிவித்து வருகிறது.

மறுசீரமைப்பு:

மறுசீரமைப்பு பார்வையில் நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்படுகைகள் மற்றும் திறன்மிகு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சீரமைக்கப்படவேண்டும்.

எனவே, ஆற்று வடிநில பரப்பின் அடிப்படையில், முதன்மைத் தலைமைப் பொறியாளர், நீ.ஆ.அ., மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொ.ப.து., அவர்களை துறைத்தலைவராக கொண்டும்,
 

  1. தலைமைப்பொறியாளர், சென்னை மண்டலம்

  2. தலைமைப்பொறியாளர், திருச்சி மண்டலம்

  3. தலைமைப்பொறியாளர், கோயம்புத்தூர் மண்டலம்

  4. தலைமைப்பொறியாளர், மதுரை மண்டலம்

ஆகிய நான்கு மண்டங்களாக பிரிக்கப்பட்டும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், திறன் மிகு செயல்பாட்டின் அடிப்படையில்,

  1. தலைமைப்பொறியாளர், வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்

  2. தலைமைப்பொறியாளர், இயக்கம் மற்றும் பராமரிப்பு

  3. தலைமைப்பொறியாளர், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்

  4. தலைமைப்பொறியாளர், திட்ட உருவாக்கம்

  5. தலைமைப்பொறியாளர், நீர் ஆய்வு நிறுவனம்

ஆகிய ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டும் செயல்பட்டு வருகின்றன.